யாத்திரிகர்களுடன் சென்ற பேருந்து விபத்து : 2 பேர் பலி, 29 பேர் காயம்

அம்பன்பொல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் 29 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று திங்கட்கிழமை (10) காலை இடம்பெற்றுள்ளது.

அம்பன்பொல பகுதியில் யாத்திரிகர்களை ஏற்றிச்சென்ற பேருந்து தரித்து நின்ற கொள்கலன் வாகனத்துடன் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் தலாவ பகுதியைச் சேர்ந்த 32 மற்றும் 71 வயதுடைய நபர்களே உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் 6 பெண்களும் ஒரு ஆணும் அம்பன்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய 18 பெண்களும் 4 ஆண்களும் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.