அதிகளவான மருந்து பாவனையால், இரத்த வாந்தி எடுத்தவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வடமராட்சி இமையான் பகுதியை சேர்ந்த இராசா சிவபாதம் (வயது 48) என்பவரே உயிரிழந்துள்ளார்.
வீட்டில் இரத்த வாந்தி எடுத்த நிலையில் , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி , நேற்றைய தினம் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.
அதிகளவான மருந்து பாவனையால், உயிரிழப்பு ஏற்பட்டது என அறிக்கையிடப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர், கடந்த 08 மாத காலமாக உளநோய்க்கு உள்ளான நிலையில் அதற்கு சிகிச்சை பெற்று மருந்துகளை உட்கொண்டு வந்தவர் என உறவினர்கள் தெரிவித்தனர்.