யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனைப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பெருமளவில் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது துப்பாக்கிகள் மற்றும் மகசின்கள் என பல வெடிபொருட்களும் ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்டமை தொடர்பாக பருத்தித்துறை காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.