யாழில் விபத்து இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்!

நெல்லியடி – கொடிகாமம் வீதியில் கலிகை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

குறித்த இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டையிழந்து, பாலத்துக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக உள்ள உணவகம் ஒன்றைச் சேர்ந்த செல்வநாயகம் வின்சன் மனோஜ்குமார் (வயது-31), கரவெட்டி வதிரியைச் சேர்ந்த விஜயகாந்த் நிசாந்தன் (வயது -29) ஆகிய இருவரே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.