யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று இனம் தெரியாத நபர்களினால் தீக்கிரை ஆக்கப்பட்டுள்ளது.
உரும்பிராய் பகுதியில் நேற்று வியாழக்கிழமை (03) இரவு வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை இனம் தெரியாத நபர்கள் தீக்கிரையாக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் உரிமையாளரால், கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.