யாழ்.பல்கலைக்கழகத்தில் மலையகக் கதைகளின் காட்சி கண்காட்சி

மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளமையை முன்னிட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை மற்றும் கலைவட்டத்தின் ஏற்பாட்டில் ‘சொர்க்கத்தின் சுமை: மலையகக் கதைகளின் காட்சி’ எனும் தொனிப்பொருளிலான கண்காட்சி நாளை மறுதினம் புதன்கிழமை(23.08.2023) பிற்பகல்-02.30 மணியளவில் மேற்படி பல்கலைக்கழக நுண்கலைத் துறைக் காட்சிக் கூடத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இந்தக் கண்காட்சியை எதிர்வரும் வியாழக்கிழமை(24.08.2023) முதல் அடுத்தவாரம் வியாழக்கிழமை(31.08.2023) வரை காலை-09 மணி முதல் மாலை-04 மணி வரை அனைவரும் பார்வையிட முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.