ரணில் முதலில் பொதுஜன பெரமுனவுடன் கலந்துரையாடி சிறந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும்!

13 ஆவது திருத்த அமுலாக்கம் தொடர்பில் சர்வக்கட்சி தலைவர் மாநாட்டை நடத்த முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் கலந்துரையாடி சிறந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும் என இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

பொரளையில் உள்ள இலங்கை கம்யூனிசக் கட்சி காரியாலயத்தில் வியாழக்கிழமை (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.