ரணில் விக்கிரமசிங்க 13 ஐ கொண்டுவருவதாக ஒரு மாயையினை ஏற்படுத்துகின்றார்

 

ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் தான் ஜனாதிபதியாகவருவதற்கு 13ம் திருத்தச்சட்டத்தினை கொண்டுவருவதாக  ஒரு மாயையினை தோற்றத்தை ஏற்படுத்துகின்றார்  அவர் அரசியல்தீர்வையும்  பெற்றுத்தரமாட்டார் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுகட்சியின்  இளைஞர் அணியின் புதிய நிர்வாகத்தெரிவு  தொடர்பான  கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கட்சி அலுவலகத்தில்  நேற்றயதினம் ஞாயிற்றுக்கிழமை (13)  நடைபெற்றது. இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்ததார்.

இந்த நிர்வாகத்தெரிவின் கலந்துரையாடலின் போது  நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்  சிறிதரன் ,  கரைச்சிபிரதேச சபையின் முன்னால் தவிசாலர் வேலமாலிதன் ,   முன்னால் வடமாகான கல்வி அமச்சர் தம்பிராசா குருகுலராஜா மற்றும்100 மேற்ப்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டனர்.