லொத்தர் சீட்டிலுப்பில் ஏழரைக் கோடி ரூபாய் பணப்பரிசு வென்ற நபரொருவரை கடத்திச் சென்ற சந்தேக நபர்களை கம்பளை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கம்பளை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த முறைப்பாடையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்டி, அக்குறணை பிரதேசத்தைச் சேர்ந்த நபரே இவ்வாறு கடத்தப்பட்டவராவார். கடத்தப்பட்ட நபர் கம்பளையிலுள்ள வீடொன்றில் 10 நாட்களாக அடைத்து வைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடத்தி வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் வீட்டின் உரிமையாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையிலேயே கடத்தப்பட்ட நபர் மீட்கப்பட்டார்.
இவர் தவிர குறித்த சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.