வடக்கில் நாளை திங்கட்கிழமை முதல் டெங்கு ஒழிப்பு வாரம்

வடமாகாணத்தில்  நாளைய தினம் திங்கட்கிழமை தொடக்கம் ஒரு வார கால பகுதிக்கு டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

 

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

எமது பகுதிகளில் டெங்கின் தாக்கம் குறைவாக காணப்பட்டாலும் எதிர்வரும் மாதங்களில் மழை வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே டெங்கின் தாக்கம் அதிகரிக்க கூடும்.

டெங்கு ஒழிப்பு தொடர்பில் வடமகாணத்தில் கலந்துரையாடல்கள் ஆளுநர் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.