வரக்காப்பொல விபத்தில் பெண் பலி : 10 பேர் காயம் !

வரக்காப்பொல, துல்ஹிரிய பகுதியில் இன்று புதன்கிழமை (02) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் காயமடைந்துள்ளனர் .

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் கனரக வாகனமும்  மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர் .