37 ஆண்டுகளுக்குப் பின்பு மீண்டும் இந்தியாவின் ராமேஸ்வரத்திலிருந்து பயணிகள் கப்பல்கள் செல்வதற்கு வசதியாக தலைமன்னார் பாலத்தை கட்டமைக்க துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் சேவைகள் அமைச்சு திட்டமிட்டுள்ளது.
வடக்கில் நிலவிய யுத்த காலப்பகுதியில் குறித்த பாலம் சிதைவடைந்ததுடன் கைவிடப்பட்டது. எவ்வாறாயினும் அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ் பாலத்தை மீள் புனரமைக்கும் பணிகள் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது.