வவுனியாவில் வீடு புகுந்து வாள் வெட்டு

வவுனியா நொச்சுமோட்டையில் நேற்று வியாழக்கிழமை (28) இரவு இனந்தெரியாத குழுவொன்று வீடொன்றில் புகுந்து அங்கிருந்த தம்பதியை வாளால் வெட்டி திருட முற்பட்ட நிலையில், வீட்டு உரிமையாளர் வாளை பறித்து திருடர்கள் மீது பதில் தாக்குதல் நடத்திய நிலையில் திருடர்கள் காயமடைந்த நிலையில் தப்பி ஓடியுள்ளனர்.

நேற்றைய தினம் இரவு வீட்டில் மாரிமுத்து செல்வநாயகம் (58) அவரது மனைவி செ. செல்வராணி இருவரும் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த நிலையில், முகமூடி அணிந்த நிலையால் திருடர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் வீட்டினுள் புகுந்து இருவர் மீதும் வாளால் வெட்டியுள்ளனர்.

இந்நிலையில், மா. செல்வநாயகம் திருடர்கள் கொண்டுவந்த வாளை பறித்து அவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால் திருடர்களில் ஒருவன் காயமடைந்த நிலையில் வீட்டில் இருந்த தொலைபேசியை எடுத்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.