வவுனியா, தோணிக்கல் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் உட்பட ஆறு சந்தேக நபர்களின் விளக்கமறியலும் 24 திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
அடையாள அணி வகுப்பிற்காக இன்று (11) தயார்படுத்தப்பட்டபோதும் சாட்சியாளரின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதனால் இன்று நீதிமன்றத்துக்கு சமூகமளிக்காமையினால் அதுவரையில் வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கவும், மீண்டும் 24 திகதி ஆள் அடையாள அணி வகுப்பிற்காக சாட்சியாளர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த வேண்டும் எனவும் நீதவானால் உத்தரவிடப்பட்டது.
அத்துடன் இன்று நீதிமன்ன்றில் 1ம் சந்தேகநபர் சுகயீனம்காரணமாக சிறு நோய்களுக்கு உட்பட்டவர் என்பதனால் சிறைச்சலை வைத்திய அதிகாரியின் மேற்பார்வையில் கீழ் சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருவதனால் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவில்லை
இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஆறு சந்தேகநபர்களிள் ஐவரை வவுனியா மாவட்ட சிறைசாலை உத்தியோகத்தினர் இன்று ஆஜர்படுத்தினர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் சட்டத்தரணி அருள்மொழிவர்மன் கொன்சியஸ் ஆஜராகி சந்தேகநபர்களை எவ்வித துன்புறுத்தலுக்கும் உள்ளாக்காமல் சந்தேகநபர்களின் நலனுரித்துக்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறும் சந்தேகநபர்கள் விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
நீதவான் முன்னிலையில் ஆயர்படுத்தப்பட்ட சந்தேக நபர்கள், பின்னர் வவுனியா சிறைச்சாலைக்கு அனுப்பி வைப்பு.