வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில் இடம்பெறும் திடுக்கிடும் சம்பவங்கள் பல!

வவுனியாவில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய காரியாலயத்தில் பாரிய மோசடிகள் இடம்பெறுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கடவுசீட்டை பெற காத்திருந்த மக்கள் இது தொடர்பில் இன்று(21.07.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளனர்.

குறித்த காரியாலயத்திற்கு முன்பாக கடந்த மூன்று நாட்களாக முதியவர்கள் மற்றும் குழந்தைகளுடன் பலர் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இங்கு வெளியிலுள்ள மாபியாக்களால் மோசடிகள் இடம்பெறுவதாகவும் அதற்கு குறித்த காரியாலயத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தான் காரணம் எனவும் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இருக்ககூடிய குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய காரியாலயத்திற்கு வெளியில் இருந்து சிலரால் பெயர்கள் பதியப்பட்டு கடவுசீட்டை பெறுவதற்கான விபரங்கள் திரடப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பில் அலுவலக கட்டுப்பாட்டாளருக்கு தெரிவித்த போது அவர் குறித்த விடயம் தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என கூறி அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.