வவுனியா தோணிக்கல் லக்சபான வீதியில் பராமரிப்பு அற்ற காணியிலிருந்து நேற்று வெள்ளிக்கிழமை (14) மதியம் கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.
உக்கிய நிலையில் கைக்குண்டு காணப்படுவதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் குறித்த வீட்டிற்கு சென்று குறித்த கைக்குண்டுனை மீட்டெடுத்துள்ளனர்.
குறித்த கைக்குண்டு இன்னும் இயங்கு நிலையில் காணப்படுகின்றதா? அல்லது செயழிழந்த நிலையில் காணப்படுகின்றதா? என்பதை ஆராய்வதற்கு பாதுகாப்பு பிரிவினருக்கு பொலிஸாரினால் தகவல் வழங்கப்பட்டமையினையடுத்து அவர்கள் கைக்குண்டை பாதுகாப்பான முறையில் அவர்கள் எடுத்துச்சென்றுள்ளனர்.