விபத்தில் குழந்தை பலி

மட்டக்களப்பு தன்னாமுனையில் ஞாயிற்றுக்கிழமை (09)  இடம்பெற்ற விபத்தில்  பாலமுனையைச்  சேர்ந்த குழந்தையொன்று உயிரிழந்துள்ளது, காயமடைந்த மூன்று பேர்  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாலமுனையைச் சேர்ந்த ஒரு வயதும் மூன்று மாதங்களேயான  பாத்திமா  மைஸ்ஹறா எனும் குழந்தையே உயிரிழந்துள்ளது.

பாலமுனையில் இருந்து ஏறாவூரை நோக்கி முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த போது தன்னாமுனையில் வைத்து  அந்த முச்சக்கர வண்டி விபத்துக்கு உள்ளாகியுள்ளது

சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்