வடமராட்சி கட்டைக்காடு பகுதியில் திங்கட்கிழமை (07) மின்கம்பத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் 22 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளார்.
முள்ளிக்குளம் மருசுகட்டி மன்னார் பகுதியைச் சேர்ந்த செபமாலை நிரோசன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இளைஞரின் சடலம் மந்திகை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.