ஆடி அமாவாசை விரத தினத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை(15-08-2023) வில்லூன்றிப் புனித தீர்த்த வளாகத்தில் இறந்த தமது தந்தையர்களுக்காகப் பலரும் ஆர்வத்துடன் பிதிர்க் கடன்களை நிறைவேற்றிக் கொண்டனர்.
வில்லூன்றி வீரகத்தி விநாயகர் ஆலயத்தில் இன்று காலை-07 மணியளவில் வசந்தமண்டபப் பூசை வழிபாடுகள் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து விநாயகப் பெருமான் ஊர்வலமாக வில்லூன்றிப் புனித ஷேத்திரத்தை வந்தடைந்தார்.
அங்கு விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றதைத் தொடர்ந்து இன்று காலை-09 மணியளவில் வில்லூன்றிப் புனித தீர்த்தத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து பல நூற்றுக்கணக்கான மக்கள் தீர்த்த சங்கற்பம் செய்து கொண்டு வில்லூன்றிப் புனித தீர்த்தத்தில் தீர்த்தமாடியதுடன் இறந்த தமது தந்தையர்களுக்காகச் சிவாச்சாரியார்கள் முன்னிலையில் பிதிர்த் தர்ப்பணங்களும் செய்து கொண்டனர்.