வீட்டின் அறைக்குள் புகுந்து துப்பாக்கிப் பிரயோகம் : ஒருவர் படுகாயம்

தலவத்துகொட  பகுதியில் உள்ள வீடொன்றின் அறைக்குள் புகுந்த இனந்தெரியாத நபரொருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக தலங்கம காவல் துறையினர்  தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்தவர் காவல் துறை  பாதுகாப்பில் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

வியாழக்கிழமை (20) இரவு 9.30 மணியளவில், தலவத்துகொட பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் அவரது வீட்டின் அறையில் இருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் அறைக்குள் நுழைந்து 9 மில்லிமீற்றர் ரக கைத்துப்பாக்கியால் மூன்று முறை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக காவல் துறையினர் குறிப்பிடுகின்றனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், திட்டமிட்ட குற்றக்குழுவைச் சேர்ந்த “தினுக” என்பவரே காயமடைந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.