வெடிப்பொருட்கள் களஞ்சியசாலைக்கு முன்பாக தீப்பரவல்

புத்தளம், மதுரங்குளி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட வீரபுர பகுதியின் வெடிபொருட்கள் களஞ்சியசாலைக்கு முன்பாக அரசாங்கத்திற்குச் சொந்தமான தென்னைத் தோட்டமொன்றில் இன்று வியாழக்கிழமை (13) திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இதன்போது, அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் பிரதேச சபை, தம்பபண்ணி கடற்படையின் தீயனைப்புப் படையினருக்குத் தகவலை வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து, கிராமவாசிகள் புத்தளம் பிரதேச சபை ஊழியர்கள், தம்பபண்ணி கடற்படை தீயனைப்புப் பிரிவினர் உடனடியாக விரைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதன்போது சுமார் 4 ஏக்கர் வரை தீப்பரவல் ஏற்பட்டுள்ளதுடன், சில தென்னை மரங்களும் பகுதியளவில் தீயில் எரிந்துள்ளதுடன் வெட்டப்ப்பட்ட மரங்கள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.

குறித்த தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையிலும் கண்டரியப்படவைல்லை என்றும் இது தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.