ஹோமாகம தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள்

ஹோமாகமவில் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் பல மணிநேரத்திற்கு பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

நேற்றிரவு 8.30அளவில் குறித்த தொழிற்சாலையின் இராசாயன களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீப்பரவல் இன்று அதிகாலை 3.30 அளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த தீ விபத்தினால், தொழிற்சாலையின் இரண்டு கட்டடங்களும் முற்றாக சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்காரணமாக, அதனை அண்டிய பகுதிகளில் வளி மாசடந்துள்ளமையால், முகக் கசவங்களை அணியுமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.

தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன் அது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.