10 வாவிகள் வற்றியுள்ளன

வறட்சியினால் நாடுமுழுவதிலும் உள்ள 10 சிறிய வாவிகள் வற்றிப்போயுள்ளன என விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால், பல மாவட்டங்களில் நெல் செய்கை மற்றும் பயிர்ச் செய்கைகளுக்கு தேவையான தண்ணீரை வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

குருநாகல் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களின் பல பகுதிகளில் சிறு வாவிகள் வற்றிப்போயுள்ளமையினால், அந்தப்பகுதிகளில் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.