சிறிலங்கா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் 100 இலட்சம் வாக்குகளை பெற்றுக் கொள்வார் என பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஹிங்குராங்கொட பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) நடைபெற்ற கூட்டம் ஒன்றில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில், ஜனாதிபதி 100 இலட்சம் வாக்குகளை பெற்றுக் கொள்வார் என்பதில் எவ்வித சந்தேகமும் தமக்கு கிடையாது.
நாடு வங்குரோத்து அடைந்து விட்டதாக பலர் குறிப்பிட்ட போதிலும் நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து ரணில் விக்கிரமசிங்க மீட்டு எடுத்து வருகிறார்.
வங்குரோத்து நிலையிலிருந்து முழுமையாக நாட்டை இன்னும் ஒரு மாத காலப்பகுதியில் மீட்க முடியும் என்றார். சிலர் தேர்தல் நடத்தவில்லையா என கேள்வி எழுப்புகின்றனர். தேர்தல் நடத்தியதனால் தான் மக்கள் வீதியில் வரிசையில் காத்திருக்க நேரிட்டது என்றார்.
எனினும், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் நூறு இலட்சம் வாக்குகளைப் பெற்று வரலாற்று ரீதியான வெற்றியை ஈட்டுவார் என குறிப்பிட்டுள்ளார்.