2024 ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மையினரின் வாக்குகள் தீர்மானமிக்கதாகும்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சிங்கள, முஸ்லிம் அரசியல் தலைமைகளை புறக்கணித்து தமிழ் தலைமைகளுடன் மாத்திரம் ஜனாதிபதி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது முறையற்றது.

இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மையினரின் வாக்குகள் தீர்மானமிக்கதாக அமையும் என்பதை அறிந்தே ஜனாதிபதி 13 ஆவது திருத்தத்தை கையில் எடுத்துள்ளார் என பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் எதிர்க்கட்சி உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க தெரிவித்தார்.

பொரளையில் உள்ள இலங்கை கம்யூனிசக் கட்சி காரியாலயத்தில் வியாழக்கிழமை (3) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.