73 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவு

நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 73 பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு 29 வீதம் வரை குறைவடைந்துள்ளது.

இதன் காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த நிலையில் வறட்சியினால் நாட்டின் பல மாவட்டங்களில் குடிநீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.