அதிமுக மாநாடு தொடர்பாக டிஜிபியிடம் புகழேந்தி புகார்

தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலிடம் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி அளித்துள்ள புகார் மனு: மதுரையில் மாநாடு நடத்தும் பழனிசாமியும், அவரது அணியினரும் சட்டத்துக்கு புறம்பாக தமிழகம் முழுவதும் தேசிய, மாநிலநெடுஞ்சாலைகளில் பேனர்களை வைத்துள்ளனர்.

மதுரை வரை வழிநெடுகிலும் வைக்கப்பட்டிருக்கும் பேனர்களால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதுபோன்ற பேனர்களால் கடந்த காலங்களில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

எனவே, மதுரையில் நடத்தஇருக்கும் மாநாடுக்கு முன்பாக,சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருக்கும் பேனர்களை காவல் துறைஉடனடியாக அகற்ற வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.