ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19-ந்தேதி உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று உலக புகைப்பட தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உலக புகைப்பட தினத்தையொட்டி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில், ” ஓடுகிற நிமிடங்களை- நிஜங்களை நிறுத்தி, தங்கள் கேமரா கண்கள் மூலம் வரலாறாக்குகிற புகைப்பட கலைஞர்கள் அனைவருக்கும் உலக புகைப்பட தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் இணைந்து, நம் புகைப்படக் கலைஞர்களை இன்று வாழ்த்தி மகிழ்ந்தோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.