பத்ரி சேஷாத்ரிக்கு காவல் துறை காவல் கேட்டு மனு

சென்னையைச் சேர்ந்த பிரபல பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி, மணிப்பூர் கலவரம் குறித்து யூ டியூப் சேனல் ஒன்றில் பேசியபோது, 2 சமூகத்தினரிடையே அமைதியை குலைக்கும் வகையிலும் வன்முறையை தூண்டும் விதமாகவும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை அவமதிக்கும் வகையிலும் பேசியதாக பெரம்பலூர் மாவட்டம் காடூர் கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கவியரசு அளித்த புகாரின்பேரில், குன்னம் காவல் துறை ஜூலை 29-ல் பத்ரி சேஷாத்ரியை கைது செய்தனர்.

இந்நிலையில், அவரை 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று காவல் துறையினர்  மனு தாக்கல் செய்தனர்.

இதேபோல, அவரை ஜாமீனில் விடுவிக்கக் கோரியும் நேற்று மனு தாக்கலாகியுள்ளது. இருதரப்பு மனுக்கள் மீதும் இன்று (ஆக.1) விசாரணை நடைபெறும் என தெரிகிறது.