பாராளுமன்ற தேர்தலில் கண்டிப்பாக வேட்பாளரை நிறுத்துவோம் !

மதுரையில் அ.தி.மு.க. மாநில மாநாடு இன்று நடைபெற்றுது. இதற்கிடையே, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மண்டபத்தில் மாலை 6 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம், தன்னால் நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

தற்போது எடப்பாடி பழனிசாமி தென் மாவட்டங்களில் தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் மதுரையில் இன்று மாநாட்டை நடத்தியுள்ளார். இதேபோல், மேற்கு மண்டலத்தில் தனது பலத்தை நிரூபிக்கும் நோக்கில் அடுத்த மாநாட்டை நடத்த ஓ.பி.எஸ். திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, இன்றைய கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், ஆலோசனைக் கூட்டத்தில் ஓ பன்னீர்செல்வம் பேசுகையில், செப்டம்பர் 3-ம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து துவங்க உள்ளேன்.

இ.பி.எஸ் பொறுப்பேற்ற பின் நடந்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வி தான். பாராளுமன்ற தேர்தலுக்கு விரைவில் நாம் தயாராக வேண்டும் . உண்மையான உறுப்பினர்களை நாம் சேர்க்கப் போவது உறுதி. பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளரை கண்டிப்பாக நிறுத்த உள்ளோம் என தெரிவித்தார்.