பொருளாதாரக் குற்றப் பிரிவில் நுண்ணறிவுப் பிரிவை உருவாக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
`முதல்வரின் முகவரி துறை’ செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
திமுக அரசு தொலைநோக்குடன் பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வந்தாலும், மக்களின் அன்றாடத் தேவைகளையும், அவர்களது கோரிக்கைகளையும் நிறைவேற்றுவது முக்கியமாகும்.