மதுரையில் அ.தி.மு.க. மாநில எழுச்சி மாநாடு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 20-ந் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் மாநிலம் முழுவதிலும் இருந்து தொண்டர்கள் திரளுகிறார்கள். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கு இணங்க சென்னை புறநகர் மாவட்டத்தில் இருந்து மாநாட்டில் கலந்து கொள்வது மற்றும் முன்னேற்பாடுகள் பற்றிய ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.கந்தன் தலைமையில் கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் கூறியதாவது:-
மாவட்டம் முழுவதும் மாநாட்டையொட்டி கல்வெட்டுகள், கட்சி கொடிக்கம்பங்கள் நடவும், சுவர் விளம்பரங்கள் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இருந்து சுமார் 5 ஆயிரம் பேர் செல்ல கார், பஸ், வேன் ஏற்பாடு செய்யப்படுகிறது. ரெயில்களிலும் செல்கிறார்கள். மாநாட்டடை வரவேற்று லோகோவுடன் கூடிய ஆட்டோ ஸ்டிக்கர்கள், கை கடிகார ஸ்டிக்கர்கள், செல்போன் ஸ்டிக்கர்கள் மாவட்டம் முழுவதும் விநியோகிக்கப்படுகிறது என்றார்.
கூட்டத்தில் பெரும்பாக்கம் இ.ராஜசேகர், எம்.காமராஜ், வி.குமார், ஜி.எம்.ஜானகிராமன், டி.சி.கருணா, எம்.கே.பழனிவேல், கே.பி.ஏசுபாதம், எஸ்.ராஜசேகர், வி.பரணிபிரசாத், எம்.எஸ்.டி.தேன்ராஜா, ஜெ.எல்.லட்சுமி, பி.என்.ராமச்சந்திரன், கே.புருஷோத்தமன், எஸ்.வரதராஜன், ஆர்.கபாலீஸ்வரன், எம்.பி.கண்ண பிரான், எஸ். செல்வராணி சுந்தர், ஏ.என்.இ.பூபதி, எம்.மணிமாறன், ஏ.அப்துல்லா, இ.சீனிவாசன், பி.எஸ்.ராஜன், ஆர்.ராஜேஷ், எஸ்.எம்.தனசேகர், கே.பி.கே. சதீஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.