மாமல்லபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள மீனவ கிராமத்தினர் மீன்பிடிக்கும் கடல் பகுதியில் காரைக்காலை சேர்ந்த மீனவர்கள் விசைப்படகில் வந்து மீன் பிடித்ததாக தெரிகிறது. இதனை கண்ட மாமல்லபுரம் மீனவர்கள் 5 பைபர் படகுகளில் கடலுக்குள் சென்று காரைக்கால் மீனவர்களின் விசைப்படகை சுற்றி வளைத்து அதில் இருந்த 14 மீனவர்களை சிறைபிடித்தனர்.
அவர்களை படகில் ஏற்றி கரைக்கு அழைத்து வந்தனர். விசைப்படகை கடலிலேயே நிறுத்தி வைத்தனர். இதே போல் இன்று காலையில் பாண்டிச்சேரி மீனவர்கள் 10 பேர் விசைப்படகில் மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் வந்து மீன் பிடித்தனர்.
அவர்களையும் மாமல்லபுரம் மீனவர்கள் சிறைபிடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான நிலை நீடிக்கிறது. மாமல்லபுரம் மீனவர்கள் காரைக்கால், பாண்டிச்சேரி மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.