தெனியாய பகுதியில் உள்ள ஆற்றில் நீராடச் சென்று நீரில் மூழ்கி காணாமல்போன 4 இளைஞர்களில் இருவரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமல்போன ஏனைய இருவரையும் தேடும் பணிகள் கடற்படை, பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகளின் பங்களிப்புடன் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தெனியாய, பெவரலிய பகுதியில் அமைந்துள்ள ஆற்றில் சனிக்கிழமை (7) பிற்பகலில் நீராடச் சென்ற இளைஞர்கள் 4 பேர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தனர். 

கொள்ளுப்பிட்டியில் உள்ள தனியார் கணினி நிறுவனமொன்றில் பணிபுரியும் 7 இளைஞர்கள் அடங்கிய குழுவினர் சுற்றுலா சென்றிருந்த வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவர்களில் 6 பேர் குறித்த பகுதியில் நீராடச் சென்றுள்ள நிலையில், எதிர்பாராதவிதமாக நால்வர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தனர்.

காணாமல் போனவர்களைத் தேடும் பொருட்டு பொலிஸாரும் கடற்படையினரும் தேடுதல் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து வந்த நிலையில் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த இரு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் காணாமல் போயுள்ள ஏனைய இரு இளைஞர்களையும் மீட்பதற்காக பொலிஸார்  மற்றும் கடற்படையினர் பிரதேசவாசிகளின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுத்மு வருகின்றனர்.