
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில் நவராத்திரி விரதத்தின் விஜயதசமி விழாவையொட்டி மானம்பூ உற்சவம் இன்று செவ்வாய்க்கிழமை (20.10.2025) காலை மழைக்கு மத்தியிலும் சிறப்பாக இடம்பெற்றது.

இன்று காலை-06.45 மணியளவில் வசந்தமண்டபப் பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து பண்டைய காலத்தில் உபயோகிக்கப்பட்ட பழைமையான சிறிய குதிரை வாகனத்தில் முருகப் பெருமான் எழுந்தருளி வந்து ஆலய வெளி வீதியில் மானம்பூ உற்சவம் இடம்பெற்றது.
