அமெரிக்காவில் வீட்டில் வெடி விபத்து- 5 பேர் கருகி பலி

அமெரிக்காவின் பென்சில்வேனியா பகுதியில் ஒரு வீட்டில் பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 2 வீடுகள் சேதம் அடைந்தது. இந்த விபத்தில் அந்த வீடுகளில் இருந்த 5 பேர் கருகி உயிர் இழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் சாவு எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. இந்த வெடிவிபத்தால் அதனை சுற்றி இருந்த 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் ஜன்னல் கண்ணாடி, கதவுகள் உடைந்து சிதறி சேதம் அடைந்தது.