அமெரிக்க கடற்படைக்கு முதல் முறையாக பெண் ஒருவர் தளபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடற்படை தளபதி அட்மிரல் மைக் கில்டேயின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் புதிய தளபதியாக லிசா பிரான்செட்டியை அதிபர் ஜோபைடன் அறிவித்துள்ளார்.
அவரது நியமனத்துக்கு சென்ட்சபை ஒப்புதல் அளிக்க வேண்டும். அது உறுதி செய்யப்பட்டால் அமெரிக்க ராணுவ தளபதியாக பதவி ஏற்கும் முதல் பெண் என்ற பெருமையை லிசா பிரான்செட்டி பெறுவார்.
தற்போது கடற்படையின் துணை தலைவராக உள்ள லிசா, பணியாளர்களின் தலைமையில் முதல் பெண் உறுப்பினர் ஆவார். கடல் மற்றும் கரையோர அனுபவத்தின் அடிப்படையில் லிசா பிரான்செட்டியை கடற்படை தளபதியாக அதிபர் ஜோபைடன் தேர்ந்தெடுத்துள்ளார் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.