அவுஸ்திரேலியாவில் இலங்கை வம்சாவளி இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. திஷாந்தன் என்ற இளைஞரே காணாமல் போயுள்ளார்.
இந்த 18 வயதுடைய இந்த இளைஞர் கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவர் மெல்போர்னில் உள்ள பீக்கன்ஸ்ஃபீல்ட் பகுதியில் வைத்தே காணாமல் போனார்.
இந்த இளைஞர் கடைசியாக காரில் பயணித்தது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் குறித்து விக்டோரியா பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.