நைஜீரியாவில் ஆயுதக்குழுவொன்று நடத்திய திடீர் தாக்குதலில் அந்நாட்டின் பாதுகாப்புப் படையினர் 26 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
நைஜீரியாவின் மத்திய பிராந்தியத்தில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு இச்சம்பவம் இட்மபெற்றுள்ளது.
அத்துடன் காயமடைந்த படையினரை மீட்பதற்காக சென்ற இராணுவ ஹெலிகொப்டர் ஒன்று நேற்று திங்கட்கிழமை வீழ்ந்துள்ளது.
உயிரிழந்த 11 படையினரையும் காயமடைந்த 7 படையினரையும் ஏற்றிச்சென்ற நிலையில் இந்த ஹெலிகொப்டர் வீழ்ந்ததாக தன்னை அடையாளம் காட்ட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எம்ஐ171 ரக ஹெலிகொப்டர் ஒன்றே வீழ்ந்துள்ளது எi நஜீரிய விமானப்படை பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.