இந்தோனேஷியாவின் சுலாவெசி தீவுக்கு அருகில் படகு ஒன்று கவிழ்ந்ததால் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 19 பேர் காணாமல் போயுள்ளனர்.
இன்று அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இப்படகில் 49 பேர் பயணித்தனர் என இந்தோனோஷியாவி;ன் தேடுதல் மற்றும் மீட்பு முகவரம் தெரழிவித்துள்ளது.
இப்படகில் பயணித்த 6 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இப்படகு மூழ்கியமைக்கான காரணம் தெரியவில்லை என மேற்படி முகவரகம் தெரிவித்துள்ளது.
புட்டோன் தீவிலிலுள்ள லன்டோ கிராமத்திலிருந்து சுலாவெசி தீவை நோக்கி சென்றுகொண்டிருந்த படகே இவ்வாறு மூழ்கியுள்ளது எனவும் இம்முகவரகம் தெரிவித்துள்ளது.