அமெரிக்காவை சேர்ந்தவர் 41 வயதாகும் பிரபல பாடகியான ப்ரிட்னி ஸ்பியர்ஸ் (Britney Spears). 1990களில் இருந்தே ‘பாப் இசையின் ராணி’ என வர்ணிக்கப்படும் இவரது இசைக்கு உலகெங்கிலும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
இவரும் ஸாம் அஸ்கரி (Sam Asghari) எனும் நடிகரும் 5 வருட காலம் ஒருவரையொருவர் விரும்பி வந்தனர். பிறகு 2022ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், சமீப காலமாக இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக செய்திகள் வந்தது.
இந்நிலையில் தங்களுக்கிடையே ‘தீர்க்க முடியாத’ கருத்து வேறுபாடுகள் தோன்றியுள்ளதாகவும், அதனால் இருவரும் பிரிய முடிவு செய்திருப்பதாகவும் அஸ்கரி தெரிவித்தார். இதனை தொடர்ந்து இருவரும் கடந்த ஜூலை 28 முதல் பிரிந்து விட்டதாக அறிவித்து, அஸ்கரி விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார்.