உலகின் பெரும் நிதி மற்றும் சொத்துக்களுடன் வாழும் செல்வந்த யாசகர் இந்தியாவின் மும்பாய் நகரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
மும்பையைச் சேர்ந்த பாரத் ஜெயின் என்பவர் உலகின் பணக்கார யாசகர் என்று எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அவரது சொத்து மதிப்பு 7.5 கோடி இந்திய ரூபாய் எனவும், மாத வருமானம் இந்திய மதிப்பில் 60,000 முதல் 75,000 ரூபாய் வரை என்றும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நபருக்கு 1.2 கோடி ரூபாய் பெறுமதியான அடுக்குமாடி குடியிருப்பும், மாதாந்தம் 30000 இந்திய ரூபாய் வாடகை பெறும் அளவில் இரண்டு வர்த்தக நிலையங்களும் உள்ளதாகவும் கூறப்படுகிறது.