கொத்துக்குண்டுகளை உக்ரைனிற்கு வழங்குவது குறித்து ஆராய்கின்றது அமெரிக்கா

அமெரிக்காவின் நேசநாடுகள் உட்பட பல உலக நாடுகள் தடை செய்துள்ள ஆயுதங்களை உக்ரைனிற்கு வழங்குவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன்   ஆராய்ந்து வருகின்றார்.

உக்ரைனிடம் வெடிபொருட்கள் மிகவும் குறைவாக காணப்படுவதால் அந்த நாடு பொதுமக்களிற்கு கடும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய கொத்துக்குண்டுகளை கோரியுள்ளது ,

 

கடந்த ஆறு மாதங்களாக அமெரிக்க ஜனாதிபதியும் அவரது சகாக்களும் உக்ரைன் யுத்தம் தொடர்பான மிக முக்கியமான கேள்வியுடன் போராடுகின்றனர்.

ரஸ்யாவுடனான போரில் உக்ரைனிற்கு மிகவும் அவசிய தேவையாகவுள்ள ஆட்டிலறி வெடிபொருட்கள் முற்றிலும் தீர்ந்துபோவதற்கு அனுமதிப்பதா அல்லது கொத்துக்குண்டுகளை வழங்குவதா என்பதே இந்த கேள்வி.

தடைசெய்யப்பட்ட இந்த ஆயுதம் பொதுமக்களிற்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது- குறிப்பாக சிறுவர்களிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.

வியாழக்கிழமை உக்ரைனிற்கு கொத்துக்குண்டுகளை வழங்குவது என்ற தீர்மானத்தை பைடன் எடுத்துள்ளார் போல தோன்றுகின்றது.

பைடனின்  இந்த நடவடிக்கை அவரது நெருங்கிய சகாக்கள் பலரிடமிருந்து அவரை தனிமைப்படுத்தலாம்.அமெரிக்காவின் நட்பு நாடுகள் பல கொத்துக்குண்டுகளை பயன்படுத்துவது சேமிப்பது ஏனைய நாடுகளிற்கு வழங்குவதை தடை செய்யும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் உட்பட பைடன் நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் உக்ரைனிற்கு கொத்துக்குண்டுகளை வழங்குவது குறித்து தயக்கம் கொண்டுள்ளனர்,எனினும் இது குறித்து இறுதி முடிவை எடுக்கும் பொறுப்பை அமெரிக்க ஜனாதிபதியிடம் அவர்கள் ஒப்படைத்துள்ளனர் என  விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உக்ரைனிற்கு கொத்துக்குண்டுகளை வழங்கும் முயற்சிகளிற்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களமே பெரும் அதிருப்தியை வெளிப்படுத்திவருகின்றது -தடையாக காணப்படுகின்றது.

மனிதாபிமான காரணங்களிற்காகவும்,அமெரிக்கா தனது நேசநாடுகளின் பாதையிலிருந்து விலகிச்செல்லவேண்டிய நிலையேற்படலாம் என்ற அச்சம் காரணமாகவும்  அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இதனை எதிர்க்கின்றது.

ஆனால் தற்போது பைடனின் சகாக்கள் கொத்துக்குண்டுகளை வழங்குவதை தவிர வேறு வழியில்லை என கருதுகின்றனர்.

கொத்துக்குண்டுகளை வழங்குமாறு உக்ரைன் ஜனாதிபதி பைடனிற்கு  தொடர் அழுத்தங்களை கொடுத்துவருகின்றார்.

கொத்துக்குண்டுகளே பதுங்குழியிலிருந்து போரிடும் ரஸ்ய படையினரை கொலை செய்வதற்கான சிறந்த ஆயுதங்கள் என உக்ரைன் ஜனாதிபதி வாதிடுகின்றார்.

போர்கள தேவைகளிற்கு கொத்துக்குண்டுகள் மிகவும் அவசியமானவை என்பது தற்போது 100 வீதம் உறுதியாகிவருகின்றது என அமெரிக்க அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.