கௌதம் அதானியை சந்தித்தார் ரணில்

இந்தியாவின் அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானியை  சிறிலங்கா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்தித்ததுள்ளார்.

இதனை கௌதம் அதானி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

குறித்த சந்திப்பில், கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய நிர்மாணம், 500 மெகாவாட் காற்றாலை மின்  திட்டம் மற்றும்  பசுமை வலுசக்தி உற்பத்தியை புதுப்பித்தல் விரிவுபடுத்துதல் உட்பட இலங்கையில் மேற்கொள்ளும் திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக கௌதம் அதானி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.