சிறுமியின் இறுதி ஆசை

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 10 வயதாகிய எம்மா எட்வேர்ட்ஸ் ற்கு லுகேமியா நோய்ப் பாதிப்புள்ளது தெரிய வந்துள்ளது. இருந்தபோதும் எம்மாவின் பெற்றோர் விரைவில் அந்நோய் குணமாகிவிடும் என நம்பியிருந்தனர்.

ஆனாலும் இவ்வருடம் ஜூன் மாதம் எமாவின் நோயானது குணமாகாது எனவும் அது தீவிரமடைந்துள்ளதுடன் எமா இன்னும் சில நாட்கள் மட்டுமே உயிர் வாழ்வார் என்ற சோகமான செய்தியை வைத்தியர்கள் எம்மாவின் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர்.

இதன்போது தனது இரண்டு வருட காதலனான டானியல் மார்ஷலை எம்மா திருமணம் செய்ய ஆசைப்பட்டுள்ளார்.

இருவரும் தமது 8 வயதிலிருந்து அன்பைப் பரிமாறி வந்ததுடன் பாடசாலையில் மதிய உணவு வேளையில் இருவரும் திருமணம் செய்யவும் முயற்சித்துள்ளனர்.

எனவே எம்மாவின் கனவைப் பூர்த்தி செய்ய இருவரின் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் இணைந்து ஜூன் 29 ஆம் திகதி எம்மா மற்றும் டானியலுக்கு மணம் முடித்து வைத்தனர்.

எம்மாவின் பாட்டியின் வீட்டு முற்றத்தில் திருமண வைபவம் நடைபெற்றதுடன் எம்மா மற்றும் டானியலின் 3 ஆம் வகுப்பு ஆசிரியர் இவர்களின் காதல் எவ்வாறு ஆரம்பித்தது என  திருமண வைபவத்தில் உரையாற்றினார்.

”பெரும்பாலான சிறுவர்கள் டிஸ்னி வான்ட் செல்ல விரும்புவார்கள். ஆனால் எம்மா திருமணம் செய்து ஒரு மனைவியாகவும், 3 குழந்தைகளை பெற்று ஒரு தாயாகவும் வாழ விரும்பினாள்” என எமாவின் தாய் அலீனா தெரிவித்தார்.

இதனையடுத்து எம்மா கடந்த ஜூலை மாதம் 11 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.