சீனாவின் வெளிவிவகார அமைச்சர் சின் காங், அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்கத் தூதுவராக 2 வருடங்க்ள பணியாற்றிய சின் காங், கடந்த டிசெம்பர் மாதம் சீன வெளியுறவு அமைச்சராக பதவியேற்றார்.
இவர் கடந்த கடந்த ஜூன் 25-ம் திகதி இலங்கை, ரஷ்யா மற்றும் வியட்நாம் நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினார். அதன் பிறகு பல வாரங்களாக அவர் பொதுவெளிக்கு வரவில்லை.
அண்மையில் இந்தோனேசியாவில் ஆசியாவின் நடந்த வெளியுறவு அமைச்சர்களின் சர்வதேச கூட்டம் போன்ற முக்கிய அரசு நிகழ்வுகளில் கின் கேங் கலந்து கொள்ளவில்லை.
இதனால், அவரது நிலை குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்திருந்தன.
இந்நிலையில், வெளி விவகார அமைச்சர் பதவியிலிருந்து சின் காங் நீக்கப்பட்டுள்ளார் என சீன அரச ஊடகங்கள் இன்று தெரிவித்துள்ளன.