2020 ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முற்பட்டார் என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
டிரம்ப் அமெரிக்காவின் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோபைடனின் வெற்றியை காங்கிரஸ் சான்றழிப்பதை தடுக்க முயன்றார் என 45 பக்க குற்றச்சாட்டுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இதன் மூலம் அமெரிக்காவை ஏமாற்றி அமெரிக்க மக்களின் நியாயமான தேர்தலுக்கான உரிமையை பறிக்க முயன்றார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்பினை வியாழக்கிழமை நியுயோர்க்கில் உள்ள சமஸ்டி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.