துருக்கியின் இஸ்தன்புல்லில் விபத்தில் சிக்கிய இலங்கை தொழிலாளர்கள் குணமடைந்து வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
துருக்கியின் இஸ்தன்புல் நகரில் இலங்கை தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று கடந்த 9ஆம் திகதி விபத்துக்குள்ளானது.
இதன்போது விபத்தில் சிக்கிய 29 இலங்கையர்களில் 9 பேர் தற்போது இஸ்தான்புல்லில் உள்ள மூன்று வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
துருக்கிக்கான இலங்கை தூதரகம், இலங்கையர்களை பணியமர்த்திய நிறுவனத்துடனும் மருத்துவமனை அதிகாரிகளுடனும் தொடர்புகொண்டு காயமடைந்தவர்களின் நிலைமை குறித்து அறிந்து தேவையான உதவிகளை செய்து வருகிறது.
இதேவேளை, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்த ஏனைய 20 பேர் அன்றே வெளியேறியுள்ளனர்.