தென்கொரியாவில் நபர் ஒருவரின் கத்திகுத்து தாக்குதலில் 12 பேருக்கு காயம்

தென்கொரிய தலைநகருக்கு அருகில்  நபர் ஒருவர் மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதலில் 12 பேர் காயமடைந்துள்ளனர்

சந்தேகநபர் தனது காரை பொதுமக்கள் மீது செலுத்தி நால்வரை காயப்படுத்தினார் அதன் பின்னர் காரிலிருந்து இறங்கி பலரை கத்தியால் குத்தியுள்ளார்

மக்கள் அதிகமாக காணப்படும் வர்த்தக பகுதியொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

20 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் ஆனால் இந்த தாக்குதலிற்கான காரணங்கள் வெளியாகவில்லை.

கருப்பு உடைஅணிந்த நபர் நடைபாதையில் காரை மோதி நிறுத்திவிட்டு கத்தியுடன் அருகில் உள்ள வணிகவளாகத்திற்குள் நுழைந்தார் என தென்கொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.