இந்த தாக்குதலில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட ஆறுபேர் காயமடைந்துள்ளனர் – தாக்குதலை மேற்கொண்ட நபர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
கட்டுமானப்பணி இடம்பெற்றுக்கொண்டிருந்த பகுதியொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதலை பயங்கரவாத சம்பவமாக கருதவில்லை என பிரதமர் கிறிஸ்ஹிப்ஹின்ஸ் தெரிவித்துள்ளார்.
பொலிஸார் மேலதிக ஆபத்துக்களை கட்டுப்படுத்தி விட்டனர் குயின்வீதி சம்பவத்தினால் மேலதிக ஆபத்து இல்லை என பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலின் பின்னணியில் அரசியல் அல்லது வேறு கொள்கைகள் இருப்பதாக தெரியவரவில்லை என பிரதமர் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிபிரயோகம் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை அதனை மேற்கொண்ட நபரை நோக்கி ஓடி ஏனையவர்களின் உயிர்களை காப்பாற்றிய துணிச்சல் மிக்க நியுசிலாந்தின் ஆண்களையும் பெண்களையும் பிரதமர் பாராட்டியுள்ளார்.
பீபா அதிகாரிகள் வீராங்கனைகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என அவுக்லாந்து மேயர் தெரிவித்துள்ளார்.